உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / தமிழக நட்சத்திரங்கள் கலக்கல் * இந்தியன் கிராண்ட் ப்ரி தடகளத்தில்

தமிழக நட்சத்திரங்கள் கலக்கல் * இந்தியன் கிராண்ட் ப்ரி தடகளத்தில்

திருவனந்தபுரம்: கிராண்ட் ப்ரி தடகளத்தில் வித்யா, நித்யா, சுபா, வருண் உள்ளிட்ட தமிழக நட்சத்திரங்கள் முதலிடம் பிடித்தனர்.தென் கொரியாவில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் (மே 27-31) நடக்க உள்ளது. இதற்குத் தயாராகும் வகையில் கேரளாவில் இந்தியன் கிராண்ட் ப்ரி 2, தடகளம் நடந்தது. பெண்கள் பிரிவில் தமிழக வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டனர். 100 மீ., தடை ஓட்டத்தில் தமிழகத்தின் நித்யா, 13.27 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பிடித்தார். 400 மீ., தடை ஓட்டத்தில் இவரது சகோதரி வித்யா, 57.45 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பெற்றார். தொடர்ந்து அசத்திய வித்யா, 200 மீ., ஓட்டத்தில் இரண்டாவது இடம் (23.72 வினாடி) பிடித்தார். 400 மீ., (பி பிரிவு) ஓட்டத்தில் சுபா (53.57 வினாடி) முதலிடம் பிடித்தார். 400 மீ., 'ஏ' பிரிவு ஓட்டத்தில் பவித்ராவுக்கு (55.21) மூன்றாவது இடம் கிடைத்தது. வருண் அபாரம்ஆண்களுக்கான தடகளத்திலும் தமிழக வீரர்கள் அசத்தினர். 200 மீ., ஓட்டத்தில் (ஏ பிரிவு) வருண், 21.51 வினாடி நேரத்தில் பந்தய துாரத்தை கடந்து முதலிடம் பெற்றார். 400 மீ., 'சி' பிரிவு ஓட்டத்தில் சுராஜ், 47.00 வினாடியில் ஓடி முதலிடம் பிடித்தார். 400 மீ., 'டி' பிரிவில் ராஜேஷ் ரமேஷ் (47.77 வினாடி) முதலிடம் பெற்றார். 200 மீ., 'சி' பிரிவில் சாம் வசந்த் (21.73) இரண்டாவது, 'டி' பிரிவு ஓட்டத்தில் ராகுல் குமார் (21.10) மூன்றாவது இடம் பிடித்து அசத்தினர். ஒடிசா வீரர் அனிமேஷ் குஜுர், 100 மீ., (10.31), 200 மீ., (20.55) ஓட்டத்தில் முதலிடம் பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ