உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / தமிழக நட்சத்திரங்கள் கலக்கல் * ஜூனியர் தடகளத்தில் ஆறு தங்கம்

தமிழக நட்சத்திரங்கள் கலக்கல் * ஜூனியர் தடகளத்தில் ஆறு தங்கம்

பிரயாக்ராஜ்: தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் (20 வயதுக்குட்பட்ட) தொடரின் 23வது சீசன், உ.பி.,யின் பிரக்யாராஜில் நடந்தது. நேற்று நடந்த ஆண்களுக்கான 'டிரிபிள் ஜம்ப்' போட்டி நடந்தது. தமிழக வீரர் ரவி, அதிகபட்சம் 15.44 மீ., துாரம் தாண்டி தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.பெண்களுக்கான 200 மீ., ஓட்ட பைனல் நடந்தது. ஏற்கனவே 400 மீ., ஓட்டத்தில் வெள்ளி வென்ற தமிழகத்தின் தேஷிகா களமிறங்கினார். இம்முறை 24.44 வினாடி நேரத்தில் வந்த தேஷிகா, தங்கம் கைப்பற்றினார். மற்றொரு தமிழக வீராங்கனை புவனேஷ்வரி (25.32) 7வது இடம் பெற்று ஏமாற்றினார்.பெண்களுக்கான 'டிரிபிள் ஜம்ப்' போட்டியில் தமிழகத்தின் சாதனா (12.75 மீ.,), பவீனா (12.55 மீ.,) முதல் இரு இடம் பிடித்து, தங்கம், வெள்ளி வசப்படுத்தினர். ஆண்களுக்கான 200 மீ., ஓட்டத்தில், தமிழகத்தின் பாண்டியன், 21.33 வினாடி நேரத்தில் வந்து தங்கப்பதக்கம் வசப்படுத்தினார். 400 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் திருமலை (54.33) ஐந்தாவது இடம் பிடித்தார். ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் பிரசாந்த் (2.00 மீ.,) 7வது இடம் பிடித்தார். தமிழக அணி 6 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கம் கைப்பற்றியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி