தடகள பயிற்சியாளர் சஸ்பெண்ட்
புதுடில்லி: ஊக்கமருந்து பயன்படுத்த உடந்தையாக இருந்த இந்திய தடகள பயிற்சியாளர் ரமேஷ் நாக்புரி 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.இந்திய ஜூனியர் தடகள அணியின் பயிற்சியாளராக 2023ல் ரமேஷ் நாக்புரி நியமிக்கப்பட்டார். கடந்த 2016ல் சிறந்த பயிற்சியாளருக்கான, துரோணாச்சார்யா விருது பெற்றார். இவர், ஐதராபாத்தில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் நடந்த ஊக்கமருந்து சோதனையை தவிர்க்க இரண்டு வீரர்களுக்கு உதவினார். இதனையடுத்து விளையாட்டு நட்சத்திரங்கள் ஊக்கமருந்து பயன்படுத்த உடந்தையாக இருந்ததாக இவரை, தேசிய ஊக்கமருந்து தடுப்பு மையம் (என்.டி.டி.ஏ.,) 'சஸ்பெண்ட்' செய்தது.இதேபோல ஊக்கமருந்து பயன்படுத்த உடந்தையாகவும், தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை நிர்வகித்ததற்காகவும், பயிற்சியாளர்களான கரம்வீர் சிங், ராகேஷ் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.ஊக்கமருந்து சோதனையை தவிர்த்த இந்திய தடகள நட்சத்திரங்களான பராஸ் சிங்கால், பூஜா ராணி, சண்முக ஸ்ரீனிவாஸ், செலிமி பிரதுஷா, ஷுபம் மஹாரா, கிரண், ஜோதி என 7 பேர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.