உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 20 பதக்கம்

குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 20 பதக்கம்

கிரேட்டர் நொய்டா: உலக குத்துச்சண்டை கோப்பை பைனல்ஸ் தொடரில் இந்தியாவுக்கு 9 தங்கம் உட்பட 20 பதக்கம் கிடைத்தது.கிரேட்டர் நொய்டாவில் (உ.பி.,), உலக குத்துச்சண்டை கோப்பை பைனல்ஸ் தொடர் நடந்தது. இதன் பைனலுக்கு முதன்முறையாக 15 இந்திய நட்சத்திரங்கள் முன்னேறி வரலாறு படைத்தனர்.பெண்களுக்கான 70 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் அருந்ததி, 5-0 என உஸ்பெகிஸ்தானின் அசிசா ஜோகிரோவாவை வீழ்த்தி தங்கம் வென்றார்.பெண்களுக்கான 48 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் மீனாக் ஷி, 5-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் போசிலோவா பர்ஜோனாவை தோற்கடித்து தங்கத்தை தட்டிச் சென்றார்.பெண்களுக்கான 54 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் பிரீத்தி, 5-0 என இத்தாலியின் சிரின் சராபியை வீழ்த்தி தங்கத்தை கைப்பற்றினார். இந்திய வீராங்கனை நுபுர் ஷியோரன் (80+ கிலோ) 5-0 என உஸ்பெகிஸ்தானின் சோடிம்போவாவை வீழ்த்தி தங்கம் வென்றார்.மற்ற எடைப்பிரிவு பைனலில் அசத்திய இந்திய வீராங்கனைகளான நிகாத் ஜரீன் (51 கிலோ, எதிர்: ஜுவான் யி குவோ, சீனதைபே), ஜெய்ஸ்மின் லம்போரியா (57 கிலோ, எதிர்: உ ஷிஹ் யி, சீனதைபே), பர்வீன் ஹூடா (60 கிலோ, எதிர்: தகுச்சி அயாகா, ஜப்பான்) தங்கத்தை கைப்பற்றினர்.பைனலில் ஏமாற்றிய இந்தியாவின் பூஜா ராணி (80 கிலோ) வெள்ளி வென்றார்.ஆண்களுக்கான பைனலில் அசத்திய சச்சின் சிவாச், ஹிதேஷ் குலியா தங்கம் வென்றனர். பைனலில் ஏமாற்றிய மற்ற இந்திய வீரர்களான ஜதுமணி சிங் (50 கிலோ), அங்குஷ் பங்கல் (80 கிலோ), அபினாஷ் (65 கிலோ), பவான் பர்த்வால் (55 கிலோ), நரேந்தர் (+90 கிலோ) வெள்ளி வென்றனர்.அரையிறுதியில் ஏமாற்றிய நீரஜ் போகத் (65 கிலோ), சவீட்டி (75 கிலோ), சுமித் குண்டு (75 கிலோ), ஜக்னோ (85 கிலோ), நவீன் (90 கிலோ) வெண்கலம் கைப்பற்றினர்.இத்தொடரில் இந்தியாவுக்கு 9 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என, மொத்தம் 20 பதக்கம் கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ