மேலும் செய்திகள்
உலக விளையாட்டு செய்திகள்
03-Oct-2025
வெள்ளி வென்றார் தரம்பிர்: உலக பாரா தடகளத்தில்
02-Oct-2025
உலக விளையாட்டு செய்திகள்
02-Oct-2025
பாங்காக்: ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச் சுற்றில் இந்தியாவின் நிஷாந்த் தேவ், நாக் அவுட் முறையில் வெற்றி பெற்றார். பிரான்சில் பாரிசில் ஒலிம்பிக் போட்டி ஜூலை 26-ஆக. 11ல் நடக்கவுள்ளது. இதற்கான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க இந்திய வீராங்கனைகளான நிகாத் ஜரீன் (50 கிலோ), பிரீத்தி (54), லவ்லினா (75) தகுதி பெற்றுள்ளனர். தற்போது தாய்லாந்தில், ஒலிம்பிக் குத்துச்சண்டைக்கான கடைசி தகுதிபோட்டி நடக்கிறது. ஆண்களுக்கான 71 கிலோ பிரிவு இரண்டாவது சுற்றில், இந்திய வீரர் நிஷாந்த் தேவ், மங்கோலிய வீரர் எர்டேனெட்டோவை சந்தித்தார். உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற நிஷாந்த் தேவ், முதல் சுற்றில் முழு ஆதிக்கம் செலுத்தினார். முதல் சுற்று முடிய 58 நிமிடம் மீதம் இருந்த நிலையில் போட்டியை நிறுத்திய நடுவர் நிஷாந்த், வெற்றி பெற்றதாக அறிவித்தார். காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். ஆண்களுக்கான 57 கிலோ பிரிவில் இந்திய வீரர் சச்சின் சிவாச், பிரிட்டனின் பிரடெரிக்கை வீழ்த்தி, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தார். 63.5 கிலோ பிரிவு இரண்டாவது சுற்று போட்டியில் இந்தியாவின் அபினாஷ், 0-5 என கொலம்பியாவின் மானுயலிடம் தோல்வியடைந்தார்.
03-Oct-2025
02-Oct-2025
02-Oct-2025