உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / புடாபெஸ்ட் ஸ்குவாஷ்: வேலவன் சாம்பியன்

புடாபெஸ்ட் ஸ்குவாஷ்: வேலவன் சாம்பியன்

புடாபெஸ்ட்: புடாபெஸ்ட் ஓபன் ஸ்குவாஷ் தொடரில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் சாம்பியன் பட்டம் வென்றார்.ஹங்கேரியில், புடாபெஸ்ட் ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடந்தது. இதன் பைனலில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், ஹங்கேரியின் பாலாஸ் பர்காஸ் மோதினர். இதில் வேலவன் 3-0 (11-4, 11-2, 11-3) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.இது, பி.எஸ்.ஏ., டூர் அரங்கில் வேலவன் வென்ற 11வது பட்டம். தவிர, ஹங்கேரியின் பர்காசிற்கு எதிராக 2வது வெற்றியை பதிவு செய்தார் வேலவன். இதுவரை மோதிய 3 போட்டியில் வேலவன் 2 (2024, 2026), பர்காஸ் ஒரு (2019) போட்டியில் வெற்றி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !