உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / சென்னையில் செஸ் நாயகன் குகேஷ் * ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

சென்னையில் செஸ் நாயகன் குகேஷ் * ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

சென்னை: ''உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற முயற்சிப்பேன்,'' என குகேஷ் தெரிவித்தார்.கனடாவின் டொரன்டோவில் 'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடர் நடந்தது. இதில் சிறப்பாக செயல்பட்ட 17 வயது இந்திய வீரர் குகேஷ், சாம்பியன் ஆனார். நேற்று சென்னை திரும்பிய இவருக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு தரப்பட்டது. அப்போது குகேஷ் கூறியது:ஐந்து முறை உலக சாம்பியன் ஆன கார்ல்சனிடம் (நார்வே) இருந்து கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. செஸ் விளையாடும் வீரர்களுக்கு பதட்டம் அதிகம் இருக்கும். அனுபவத்தின் உதவியால் இதை எளிதாக கையாள கற்றுக் கொள்ளலாம்.தமிழக அரசு நடத்திய சென்னை கிராண்ட் மாஸ்டர் தொடர்தான், எனக்கு கேண்டிடேட்ஸ் தொடருக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை வழங்கியது. கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது, எனக்கு சிறப்பான சாதனை. விஸ்வநாதன் ஆனந்த் என் ரோல் மாடல். அவர் வழங்கிய ஆலோசனைக்கு நன்றி. உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சீனா வீரர் டிங் லிரென் வலிமையான வீரர். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.என்னை கவர்ந்தவர்கள்குகேஷ் கூறுகையில்,''இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி, டென்னிஸ் வீரர் ஜோகோவிச் (செர்பியா) என இருவரும் நெருக்கடியான நேரங்களில் சிறப்பாக செயல்படுவர். தேவைப்படும் போது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவர். இவர்களது, இந்த குணம் தான் என்னை கவர்ந்தது,'' என்றார்.இந்தியாவில் நடக்குமாஉலக சாம்பியன்ஷிப் பட்டத்துக்கான போட்டியில் குகேஷ், நடப்பு உலக சாம்பியன் சீனாவின் டிங் லிரெனுடன் மோத உள்ளார். இப்போட்டி நடக்கும் இடம் இன்னும் முடிவாகவில்லை. இப்போட்டியை இந்தியாவில் நடத்த முயற்சிகள் நடக்கின்றன. தமிழகம், குஜராத், தெலுங்கானா, ஆந்திரா ஆர்வமாக உள்ளன. கடந்த 2013ல் ஆனந்த், நார்வேயின் கார்ல்சன் மோதிய உலக செஸ் போட்டி சென்னையில் நடந்தது. இதில் கார்ல்சன் புதிய சாம்பியன் ஆனார். இதுபோல, மீண்டும் சென்னையில் நடக்குமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை