உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / கேண்டிடேட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா தகுதி

கேண்டிடேட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா தகுதி

புதுடில்லி: கேண்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு தகுதி பெற்ற ஒரே இந்திய வீரரானார் பிரக்ஞானந்தா.சைப்ரசில், அடுத்த ஆண்டு (மார்ச் 28 - ஏப். 16) கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் நடக்கவுள்ளது. உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதிச்சுற்றான இத்தொடரில் 8 வீரர்கள் பங்கேற்கின்றனர். இதுவரை பேபியானோ காருணா (அமெரிக்கா), அனிஷ் கிரி (நெதர்லாந்து) உள்ளிட்ட 6 பேர் தகுதி பெற்றிருந்தனர்.நடப்பு ஆண்டுக்கான 'பிடே சர்க்யூட்' புள்ளிப்பட்டியலில் 115.17 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா 20, கேண்டிடேட்ஸ் தொடருக்கான இடத்தை உறுதி செய்தார். இந்த ஆண்டு டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ், சூப்பர்பெட் செஸ் கிளாசிக் ருமேனியா, லண்டன் செஸ் கிளாசிக் ஓபன், உஸ்பெகிஸ்தான் செஸ் கோப்பை மாஸ்டர்ஸ் தொடர்களில் முதலிடம் பிடித்த இவர், சமீபத்தில் முடிந்த உலக கோப்பையில் 4வது சுற்று வரை சென்றிருந்தார்.பெண்களுக்கான கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் விளையாட இந்தியா சார்பில் திவ்யா தேஷ்முக், கொனேரு ஹம்பி, வைஷாலி, ஏற்கனவே தகுதி பெற்றிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி