செஸ்: அர்ஜுன் ஏமாற்றம்
புடாபெஸ்ட்: ‘டோட்டல்’ செஸ் 10வது சுற்றில் சகவீராங்கனை வைஷாலியிடம் தோல்வியடைந்த இந்திய வீரர் அர்ஜுன், ‘நாக்–அவுட்’ சுற்றுக்கான வாய்ப்பை இழந்தார். ஹங்கேரியில் ‘டோட்டல் செஸ் உலக சாம்பியன்ஷிப் டூர் பைலட்’ தொடர் நடக்கிறது. ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற நார்வேயின் கார்ல்சன், இந்தியாவின் பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, வைஷாலி உட்பட 24 பேர் பங்கேற்கின்றனர். ‘டி’ பிரிவு 9வது சுற்று போட்டியில் அர்ஜுன் (வெள்ளை), வைஷாலி (கருப்பு) மோதினர். இதில் 60வது நகர்த்தலில் அர்ஜுன் வெற்றி பெற்றார். அடுத்து நடந்த 10வது சுற்றில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் அர்ஜுன் களமிறங்கனார். இதில் எழுச்சி கண்ட வைஷாலி (வெள்ளை), 61வது நகர்த்தலில் அர்ஜுனை (கருப்பு) வீழ்த்தி பதிலடி கொடுத்தார். ‘பி’ பிரிவில் பிரக்ஞானந்தா, வியட்நாமின் லியம் லே மோதிய 9, 10வது சுற்று போட்டிகள் ‘டிரா’ ஆனது. ஏற்கனவே பிரக்ஞானந்தா (7 புள்ளி, 6வது இடம், ‘பி’ பிரிவு), வைஷாலி (7 புள்ளி, 6வது இடம், ‘டி’ பிரிவு), அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தனர். இந்நிலையில் ‘டி’ பிரிவில் 3வது இடம் பிடித்த அர்ஜுனும் (16 புள்ளி), ‘நாக்–அவுட்’ சுற்றுக்கு தகுதி பெறத்தவறினார்.