செஸ்: பிரக்ஞானந்தா-கார்ல்சன் டிரா
கோல்கட்டா: கோல்கட்டாவில், டாடா ஸ்டீல் செஸ் இந்தியா தொடர் நடக்கிறது. இதில் 'ரேபிட்' முறையிலான ஓபன் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் மோதினர். கறுப்பு நிற காய்களுடன் சாமர்த்தியமாக விளையாடிய தமிழகத்தின் பிரக்ஞானந்தா, 35வது நகர்த்தலில் போட்டியை 'டிரா' செய்தார். இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, நிஹால் சரின் மோதிய மற்றொரு முதல் சுற்றுப் போட்டியும் 'டிரா' ஆனது. இந்தியாவின் நாராயணன், ஜெர்மனியின் வின்சன்ட் கீமரை தோற்கடித்தார்.இரண்டாவது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, ரஷ்யாவின் டேனியல் டுபோவ் மோதினர். வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா, 45வது நகர்த்தலில் போட்டியை 'டிரா' செய்தார். இந்தியாவின் நிஹால் சரின், நார்வேயின் கார்ல்சன் மோதிய மற்றொரு 2வது சுற்றுப் போட்டி 'டிரா' ஆனது. இந்தியாவின் விதித் சந்தோஷ் குஜ்ராத்தி, அர்ஜுன் எரிகைசி மோதிய மற்றொரு 2வது சுற்றுப் போட்டியை 'டிரா'வில் முடிந்தது.மூன்றாவது சுற்றுப் போட்டியில் பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக்கிடம் தோல்வியடைந்தார். மூன்று சுற்றுகளின் முடிவில் நோடிர்பெக் (2.5 புள்ளி) முதலிடத்தில் உள்ளார். அடுத்த மூன்று இடங்களில் நாராயணன், கார்ல்சன், சோ வெஸ்லே தலா 2.0 புள்ளிகளுடன் உள்ளனர்.