உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / அர்ஜுன் இரண்டாவது வெற்றி * சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில்

அர்ஜுன் இரண்டாவது வெற்றி * சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில்

சென்னை: கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் இரண்டாவது வெற்றி பெற்றார் அர்ஜுன்.சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் இரண்டாவது சீசன், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடக்கிறது. நேற்று, மூன்றாவது சுற்று நடந்தது. இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, ரஷ்யாவின் அலெக்சே சரனாவை சந்தித்தார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன், துவக்கத்தில் பின்தங்கினார். பின் மீண்ட இவர், 37 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இத்தொடரில் இவர் பெற்ற இரண்டாவது வெற்றி இது. இந்திய வீரர்கள் விதித் குஜ்ராத்தி-அரவிந்த் சிதம்பரம் மோதிய போட்டி 'டிரா' ஆனது. மற்றொரு போட்டியில் ஆரோனியன், ஈரானின் பர்ஹாமை வீழ்த்தினார். பிரான்சின் மேக்சிம் வாசியர், அமினை (ஈரான்) வென்றார். மூன்று சுற்று முடிவில் அமின் (2.5), அர்ஜுன் (2.5), ஆரோனியன் (2.0) முதல் 3 இடங்களில் உள்ளனர். அரவிந்த் (1.4) நான்காவது இடத்தில் உள்ளார்.பிரனவ் 'ஹாட்ரிக்'சாலஞ்சர் பிரிவில் நேற்று 3வது சுற்று நடந்தன. இந்தியாவின் பிரனவ், சக வீரர் கார்த்திகேயன் முரளியை வென்றார். இந்திய வீராங்கனை வைஷாலி, பிரனேஷிடம் தோல்வியடைந்தார். 3 சுற்று முடிவில் பிரனவ் (3.0), லியான் (2.5), ரவுனக் (2.0) 'டாப்-3' இடத்தில் உள்ளனர். இந்திய வீராங்கனைகள் வைஷாலி (0.5), ஹரிகா (0.5) 6, 7வது இடத்தில் உள்ளனர்.'நம்பர்-2'நேற்று சரனாவை வென்ற அர்ஜுன், சர்வதேச செஸ் 'லைவ் ரேட்டிங்' தர வரிசையில் 2805.8 புள்ளி பெற்றார். 4வது இடத்தில் இருந்து, முதன் முறையாக இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார். நார்வேயின் கார்ல்சன் (2831) முதலிடத்தில் உள்ளார். அமெரிக்காவின் காருணா (2805.0), நகமுரா (2802.0), இந்தியாவின் குகேஷ் (2783.0) 3, 4, 5வது இடத்தில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை