உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / செஸ்: அர்ஜுன் வெற்றி

செஸ்: அர்ஜுன் வெற்றி

சென்னை: சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் மூன்றாவது சுற்றில் இந்தியாவின் அர்ஜுன் வெற்றி பெற்றார். சென்னையில் ஒவ்வொரு ஆண்டும், 'கிராண்ட் மாஸ்டர்ஸ்' செஸ் தொடர் நடத்தப்படுகிறது. இதன் நான்காவது சீசன், தற்போது நடக்கிறது. உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், நிகால் சரின், அர்ஜுன் எரிகைசி, அமெரிக்காவின் நைமான், பிரான்சின் அலிரேசா, உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக் உட்பட 8 பேர் பங்கேற்றுள்ளனர். நேற்று மூன்றாவது சுற்று போட்டிகள் நடந்தன. அர்ஜுன், நைமான் மோதினர். வெள்ளை நிற காய்களுடன் அர்ஜுன் விளையாடினார். 20 நகர்த்தலில் சற்று பின் தங்கி இருந்த அர்ஜுன், நைமான் செய்த தவறை பயன்படுத்தி, மீண்டார். 43வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.குகேஷ்-ரஷ்யாவின் டிமிட்ரி, நிகால் சரின்-அலிரேசா, இந்தியாவின் பிரனேஷ்-நாடிர்பெக் மோதிய மற்ற மூன்று போட்டிகளும் 'டிரா' ஆகின. இதுவரை முடிந்த மூன்று சுற்று முடிவில் அலிரேசா (2.5), அர்ஜுன் (2.0), நிகால் சரின் (1.5) 'டாப்-3' இடத்தில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !