உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / செஸ்: அர்ஜுன் ஏமாற்றம்

செஸ்: அர்ஜுன் ஏமாற்றம்

கேப்டவுன்: 'பிரீஸ்டைல்' செஸ் தொடரின் காலிறுதியில் அர்ஜுன் எரிகைசி, தோல்வியடைந்தார். தென் ஆப்ரிக்காவில் பிரீஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் தொடரின் நான்காவது சீசன் நடக்கிறது. ஐந்து முறை உலக சாம்பியன் நார்வேயின் கார்ல்சன், இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி உட்பட 8 பேர் பங்கேற்கின்றனர். முதலில் லீக் முறையில் போட்டிகள் நடந்தன. இதன் ஐந்தாவது சுற்றில் அர்ஜுன், கார்ல்சன் மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார் அர்ஜுன். துவக்கத்தில் இருவரும் சமபலத்தில் மோதினர். பின் அர்ஜுன் ஆதிக்கம் செலுத்தினார். முடிவில் போட்டியின் 34 வது நகர்த்தலில் கார்ல்சன் தோல்வியடைந்தார். 8 சுற்று முடிவில் 4.5 புள்ளியுடன் 3வது இடம் பிடித்த அர்ஜுன், காலிறுதியில் 7 வது இடம் பெற்ற ஜெர்மனியின் வின்சென்ட் கீமெரை சந்தித்தார். இதில் அர்ஜுன் 0.5-1.5 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ