உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / செஸ்: விசாக் வெண்கலம்

செஸ்: விசாக் வெண்கலம்

ஹாங்காங்: ஹாங்காங் சர்வதேச செஸ் தொடரில் இந்தியாவின் விசாக், வெள்ளி வென்றார்.ஹாங்காங்கில் சர்வதேச ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இந்தியாவின் இளம்பரிதி, அபிஜீத் குப்தா, விசாக் உட்பட மொத்தம் 131 பேர் பங்கேற்றனர்.இதன் 9வது, கடைசி சுற்றில் இந்திய வீரர்கள் விசாக், இளம்பரிதி மோதினர். இப்போட்டி 28 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. மற்றொரு போட்டியில் மங்கோலியாவின் அமர்டுவ்சின், பின்லாந்தின் வில்கா சிபிலாவை வீழ்த்தினார். முடிவில் அமர்டுவ்சின், 7.5 புள்ளியுடன் முதலிடம் பிடித்து தங்கம் கைப்பற்றினார். விசாக் (7.0), சீனாவின் பெங் ஜியாங்ஜியன் (7.0) சமபுள்ளி பெற்றனர். இருப்பினும் 'டை பிரேக்கர்' புள்ளியில் முந்திய ஜியாங்ஜியன், வெள்ளி வென்றார். விசாக்கிற்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது. இளம்பரிதி (6.5) 5, அபிஜீத்குப்தா (6.0) 11வது இடம் பிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை