உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / செஸ்: பிரக்ஞானந்தா அபாரம்

செஸ்: பிரக்ஞானந்தா அபாரம்

செயின்ட் லுாயிஸ்: செயின்ட் லுாயிஸ் செஸ் தொடரின், 2, 3வது சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.அமெரிக்காவின் செயின்ட் லுாயிஸ் செஸ் கிளப் சார்பில் சர்வதேச 'ரேபிட் அண்டு பிளிட்ஸ்' தொடர் நடத்தப்படுகிறது. இந்தியா சார்பில் பிரக்ஞானந்தா உட்பட மொத்தம் 10 பேர் பங்கேற்கின்றனர். முதலில் 'ரேபிட்' முறையில் போட்டி நடக்கின்றன. பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் பெரஸ் மோதிய முதல் சுற்று 'டிரா' ஆனது. இரண்டாவது சுற்றில் பிரக்ஞானந்தா-லெவான் ஆரோனியன் (அமெரிக்கா) மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தினர். முடிவில் 34 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.அடுத்து நடந்த மூன்றாவது சுற்றில் பிரக்ஞானந்தா, மற்றொரு அமெரிக்க வீரர் பேபியானோவை எதிர்கொண்டார். இம்முறை கருப்பு நிற காய்களுடன் விளையாடினார் பிரக்ஞானந்தா.27 நகர்த்தல் வரை போட்டி சமநிலையில் இருந்தது. பின் சிறப்பாக செயல்பட்ட பிரக்ஞானந்தா, 62 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். முதல் நாள் நடந்த 3 சுற்று முடிவில் பிரக்ஞானந்தா, 5 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளார். அமெரிக்காவின் சோ வெஸ்லே (4), உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தாரோவ் (4) அடுத்த இரு இடத்தில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ