மேலும் செய்திகள்
செஸ்: அர்ஜுன், வைஷாலி அபாரம்
11-Nov-2026
புடாபெஸ்ட்: ‘டோட்டல்’ செஸ் தொடரில் அர்ஜுன், பிபிசாராவை வீழ்த்தினார். ஹங்கேரியில் ‘டோட்டல் செஸ் உலக சாம்பியன்ஷிப் டூர் பைலட்’ தொடர் நடக்கிறது. ஐந்து முறை உலக சாம்பியன் ஆன நார்வேயின் கார்ல்சன், இந்தியாவின் பிரக்ஞானந்தா, அர்ஜுன், வைஷாலி உட்பட 24 பேர் பங்கேற்கின்றனர். வழக்கமான தொடர் போல இல்லாமல், ‘கிளாசிக்’ (தலா 45 நிமிடம்), ‘ரேபிட்’ (தலா 15 நிமிடம்), ‘பிளிட்ஸ்’ (தலா 3 நிமிடம்) என மூன்று பிரிவிலும் போட்டி நடக்கிறது. ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள அர்ஜுன், கஜகஸ்தானின் பிபிசாராவை எதிர்கொண்டார். முதல் போட்டியில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன், 46 நகர்த்தலில் தோல்வியடைந்தார். இரண்டாவது போட்டியில் அர்ஜுன், வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார். இம்முறை சிறப்பாக செயல்பட்ட அர்ஜுன், 48 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதே பிரிவில், அமெரிக்காவின் ஹன்ஸ் நைமானுக்கு எதிராக மோதிய இரு போட்டியிலும் வைஷாலி தோல்வியடைந்தார். ‘சி’ பிரிவில் அர்ஜுன் (5 புள்ளி) 3வது இடத்தில் உள்ளார். வைஷாலி (1) கடைசி இடத்தில் (6) உள்ளார். ‘பி’ பிரிவில் உள்ள பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் பேபியானோவை சந்தித்தார். இதன் இரு போட்டியிலும் பிரக்ஞானந்தா தோல்வியடைந்தார். 2 புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளார்.
11-Nov-2026