உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / குகேஷ்-லிரென் டிரா * உலக செஸ் சாம்பியன்ஷிப்பில்...

குகேஷ்-லிரென் டிரா * உலக செஸ் சாம்பியன்ஷிப்பில்...

சிங்கப்பூர்: குகேஷ், டிங் லிரென் மோதிய உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் ஐந்தாவது சுற்று 'டிரா' ஆனது.சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. கேண்டிடேட்ஸ் தொடரில் சாதித்த உலகின் 'நம்பர்--5' இந்தியாவின் குகேஷ் 18, நடப்பு உலக சாம்பியன், உலகின் 'நம்பர்--15' சீனாவின் டிங் லிரென் 32, விளையாடுகின்றனர்.மொத்தம் 14 சுற்று நடக்கும். முதலில் 7.5 புள்ளி பெறும் வீரர், உலக சாம்பியன் ஆகலாம். மொத்த பரிசுத்தொகை ரூ.21 கோடி. முதல் நான்கு சுற்றில் இருவரும் தலா ஒரு வெற்றி, 2 'டிரா' செய்திருந்தனர். நேற்று ஐந்தாவது சுற்று நடந்தது. குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். டிங் லிரென் சிறப்பாக செயல்பட்ட போதும், 22 நகர்த்தல் வரை போட்டி சமநிலையில் இருந்தது. 23வது நகர்த்தலில் சற்று சறுக்கிய குகேஷ், அடுத்தடுத்த நகர்த்தலில் மீண்டு வந்தார். முடிவில் 40 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. ஐந்து சுற்று முடிவில், குகேஷ் (2.5 புள்ளி), டிங் லிரென் (2.5) சமநிலையில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை