உள்ளூர் செய்திகள்

எக்ஸ்டிராஸ்

* ஐ.சி.சி., ஒருநாள் உலக கோப்பை தொடர், 2027, அக். 2 முதல் நவ. 21 வரை தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியாவில் நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட்டுகளை பெறுவதற்காக, 142 நாடுகளில் இருந்து சுமார் 1.5 கோடி விண்ணப்பங்கள் ஐ.சி.சி.,க்கு வந்துள்ளன. * இந்தியாவின் சிறந்த தடகள பயிற்சியாளர்களில் ஒருவர் முகமது யூனுஸ் கான். தடகள வீரர் குல்வீர் சிங்கின் வழிகாட்டியாக இருந்தார். ஊக்கமருந்து தடுப்பு விதிமீறல் சம்பவத்தில் யூனுஸ் கான் உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில், சஸ்பெண்ட் செய்யப்பட்டார். * ஹாக்கி இந்தியா சார்பில் ஆண்கள் அணிகளுக்கான தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் உ.பி.,யில் நடக்கிறது. ‘டிவிசன் பி’ல் நடந்த போட்டியில் சத்தீஷ்கர் அணி 12–1 என்ற கோல் கணக்கில் உத்தரகாண்ட் அணியை வென்றது. * ஐ.சி.சி., பெண்களுக்கான ஒருநாள் பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, 790 புள்ளியுடன் முதலிடத்தில் தொடர்கிறார். பவுலர் வரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா, 9வது இடத்தில் பின்தங்கியுள்ளார். ‘ஆல் ரவுண்டர்’ வரிசையில் இவர், 4வதாக உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ