மேலும் செய்திகள்
அரையிறுதியில் இந்திய ஜோடி: சீன டேபிள் டென்னிசில்
09-Oct-2026
இந்திய வீராங்கனை மேகனா 30, அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். புனேயில் நடந்த ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ ஈஸ்ட் பெங்கால் அணி 5–1 என்ற கோல் கணக்கில் இன்டர் காஷி அணியை வீழ்த்தியது. உஸ்பெகிஸ்தானில், ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் நடக்கிறது. கலப்பு இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய், யாஷஸ்வினி ஜோடி 3–2 (11–6, 8–11, 8–11, 11–9, 11–9) என, தென் கொரியாவின் பார்க், லீ ஜோடியை வீழ்த்தியது. பிரெஞ்ச் ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சிந்து, சீனதைபேயின் பின்–சியான் சியு மோதினர். சிந்து 21–13, 21–14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
09-Oct-2026