உள்ளூர் செய்திகள்

எக்ஸ்டிராஸ்

 கத்தார் தலைநகர் தோஹாவில், வரும் நவ. 19–29ல் ‘ரைசிங் ஸ்டார்’ ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதற்கான இந்தியா ‘ஏ’ அணியில் துணை கேப்டனாக இடம் பிடித்திருந்த ரஜத் படிதர் காயத்தால் விலகினார். இவருக்கு பதிலாக ஆயுஷ் படோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ரிங்கு சிங் நியமிக்கப்பட்டார்.  ஆசிய பெண்களுக்கான சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து 3வது சீசன் நடக்கிறது. இதன் ‘பி’ பிரிவு லீக் சுற்றில், ஒரு வெற்றி, 2 தோல்வியை பெற்ற ஈஸ்ட் பெங்கால் அணி, 3வது இடம் பிடித்த அணிகளுக்குள் ‘டாப்–2’ இடம் பிடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றது. இத்தொடரின் காலிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய கால்பந்து கிளப் அணியானது.  தோஹாவில், உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான தனிநபர் 25 மீ., ‘ஸ்டேன்டர்டு பிஸ்டல்’ பிரிவில் இந்தியாவின் நிவேதிதா வெண்கலம் வென்றார். இதன் அணிகள் பிரிவில் நிவேதிதா, மான்வி ஜெயின், சிம்ரன்பிரீத் கவுர் பிரார் அடங்கிய இந்திய அணி வெள்ளி வென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை