உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / நித்யா, மானவ் தங்கம் * பெடரேஷன் தடகளத்தில்...

நித்யா, மானவ் தங்கம் * பெடரேஷன் தடகளத்தில்...

புவனேஸ்வர்: பெடரேஷன் கோப்பை தடகளத்தில் நித்யா, மானவ் தங்கம் கைப்பற்றினர். தேசிய பெடரேஷன் கோப்பை சீனியர் தடகள சாம்பியன்ஷிப் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடக்கிறது. பெண்களுக்கான 100 மீ., தடை ஓட்டம் நடந்தது. தமிழகத்தின் நித்யா (13.14 வினாடி) தங்கப்பதக்கம் கைப்பற்றினார். ஒடிசாவின் பிரஷாந்தி (13.40 வினாடி), மேற்குவங்கத்தின் மவுமிதா (13.64 வினாடி) அடுத்த இரு இடம் பிடித்தனர். தமிழகத்தின் நந்தினி (14.04), ஸ்ரீரேஷ்மா (14.12) 6, 7வது இடம் பிடித்தனர்.ஆண்களுக்கான 110 மீ., தடை ஓட்டத்தில் தமிழக வீரர் மானவ்(14.03 வினாடி) தங்கப்பதக்கம் வசப்படுத்தினார். தமிழகத்தின் நிஷாந்த்ராஜா (14.22 வினாடி) வெள்ளிப்பதக்கம் வென்றார்.கதுவா சாதனைபெண்களுக்கான குண்டுஎறிதல் போட்டியில் மகாராஷ்டிராவின் அபா கதுவா, 18.41 மீ., துாரம் எறிந்து, தங்கம் வென்று புதிய தேசிய சாதனை படைத்தார். பைனலில் நீரஜ் பெடரேஷன் கோப்பை தடகளத்தில் ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா, ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்ற கிஷோர் ஜெனா பங்கேற்கின்றனர். இன்று நடக்கும் ஈட்டி எறிதல் போட்டி தகுதிச்சுற்றில் இவர்கள் பங்கேற்க மாட்டர். நாளை (இரவு 7:00) மணிக்கு நடக்கும் பைனலில் நேரடியாக களமிறங்குகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை