உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / கோப்பை வென்றார் விராஜ்

கோப்பை வென்றார் விராஜ்

குருகிராம்: இந்திய கோல்ப் தொடரில் விராஜ் மடப்பா சாம்பியன் ஆனார்.இந்திய கிளாசிக் கோல்ப் சாம்பியன்ஷிப் தொடர் ஹரியானாவில் நடந்தது. முதல் இரு சுற்று முடிவில் 67, 73 ஸ்டிரோக்குடன் நான்காவது இடத்தில் இருந்தார் கோல்கட்டாவின் விராஜ் மடப்பா. நேற்று கடைசி சுற்று போட்டி நடந்தது. இதில் சிறப்பாக செயல்பட்ட விராஜ், 65 ஸ்டிரோக் பெற்றார். இதையடுத்து 205 ஸ்டிரோக்குடன் (67, 73, 65) முதலிடத்துக்கு முன்னேறி கோப்பை வென்றார். காயம் காரணமாக நீண்ட ஓய்வில் இருந்த விராஜ், 2021க்குப் பின் இவர் வென்ற மூன்றாவது சர்வதேச கோப்பை இது. இவருக்கு ரூ. 6 லட்சம் பரிசு கிடைத்தது. பெங்களூருவின் திரிஷுல் சின்னப்பா (207), சண்டிகரின் ரஞ்சித் சிங் (208) அடுத்த இரு இடம் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை