உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஹேண்ட்பால்: இந்தியா ஏமாற்றம்

ஹேண்ட்பால்: இந்தியா ஏமாற்றம்

புதுடில்லி: ஆசிய ஹேண்ட்பால் லீக் போட்டியில் இந்திய அணி 15-48 என, ஜப்பானிடம் தோல்வியடைந்தது. டில்லியில், பெண்களுக்கான ஆசிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் 20வது சீசன் நடக்கிறது. இந்தியா, 'நடப்பு சாம்பியன்' தென் கொரியா, ஜப்பான் உட்பட 8 அணிகள் பங்கேற்றன.'பி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, ஜப்பானை எதிர்கொண்டது. இதில் வென்றால் அரையிறுதிக்கு முன்னேறலாம் என்ற நிலையில் முதல் பாதியில் இந்திய அணி 8-29 என பின் தங்கியது. தொடர்ந்து இரண்டாவது பாதியிலும் (7-19) ஏமாற்றியது. முடிவில் இந்திய அணி 15-48 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. 3 போட்டியில் 1 வெற்றி மட்டும் பெற்று, பட்டியலில் 3வது இடம் பிடித்து, அரையிறுதி வாய்ப்பை இழந்தது. அடுத்து 5 முதல் 8 வரையிலான இடத்தை பிடித்த இந்திய அணி, நாளை சிங்கப்பூரை எதிர்கொள்கிறது. தென் கொரியா, கஜகஸ்தான், ஜப்பான், ஈரான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை