உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஹாக்கி: தமிழக அணி ஏமாற்றம்

ஹாக்கி: தமிழக அணி ஏமாற்றம்

ரூர்கேலா: ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் ஏமாற்றிய தமிழக அணி 2-4 என கோனாசிகா அணியிடம் வீழ்ந்தது.ரூர்கேலா (ஒடிசா), ராஞ்சியில் (ஜார்க்கண்ட்) ஆண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் 6வது சீசன் நடக்கிறது. ரூர்கேலாவில் நடந்த லீக்போட்டியில் தமிழகம், கோனாசிகா (விசாகப்பட்டினம்) அணிகள் மோதின. இதில் ஏமாற்றிய தமிழக அணி 2-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. தமிழக அணிக்கு அமித் ரோஹிதாஸ் (8வது நிமிடம்), டாம் கிரேக் (56வது) தலா ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தனர். கோனாசிகா அணி சார்பில் அராய்ஜீத் சிங் (14வது நிமிடம்), ஜாக் வாலர் (45வது), டிம் ஹோவர்ட் (50வது), நிக்கின் திம்மையா (51வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர்.ஏற்கனவே அரையிறுதிக்கான இடத்தை உறுதி செய்த தமிழக அணி, 9 போட்டியில், 4 வெற்றி உட்பட 17 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !