உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / தமிழக அணியில் செல்வம் கார்த்தி * ஹாக்கி இந்தியா லீக் தொடரில்...

தமிழக அணியில் செல்வம் கார்த்தி * ஹாக்கி இந்தியா லீக் தொடரில்...

புதுடில்லி: ஹாக்கி இந்தியா லீக் தொடரில் செல்வம் கார்த்தியை ரூ. 24 லட்சத்துக்கு தமிழக டிராகன்ஸ் அணி வாங்கியது. ஹாக்கி இந்தியா அமைப்பு (எச்.ஐ.,) சார்பில் ஹாக்கி இந்தியா லீக் (எச்.ஐ.எல்.,) தொடர் நடத்தப்படுகிறது. கடந்த 2013ல் துவக்கப்பட்ட இத்தொடர், 7 ஆண்டுக்குப் பின் மீண்டும் வரும் டிச. 28- 2025, பிப் 1ல் நடக்கவுள்ளது.இதில் ஆண்கள் (8), பெண்கள் (4) என மொத்தம் 12 அணிகள் பங்கேற்க உள்ளன. இதற்கான வீரர்கள் ஏலம் டில்லியில் நடந்தது. நேற்று இரண்டாவது நாள் ஏலத்தில், அதிகபட்சமாக பெல்ஜியம் அணியின் மத்திய கள வீரர் விக்டர் வெக்னெஸ், ரூ. 40 லட்சத்துக்கு ஏலம் போனார். இவரை சூர்மா அணி வாங்கியது. தவிர, கலிங்கா அணி நெதர்லாந்தின் தியரி பிரிங்க்மன் (ரூ. 38 லட்சம்), ஆர்தர் வானை (ரூ. 32 லட்சம்) அதிக தொகைக்கு வாங்கியது. கார்த்தி வாய்ப்பு ஆஸ்திரேலியாவின் பிளேக் கோவர்சை ரூ. 27 லட்சத்துக்கு தமிழக டிராகன்ஸ் வாங்கியது. முன்கள வீரர், தமிழகத்தின் செல்வம் கார்த்தி (ரூ. 24 லட்சம்), உத்தம் சிங்கும் (ரூ. 23 லட்சம்) தமிழக அணியில் இணைந்தனர்.தமிழக வீரர் மாரீஸ்வரன் சக்திவேலை 24, எந்த அணியும் வாங்கவில்லை. தவிர இந்திய அணியின் முன்கள வீரர் மணிந்தர் சிங், ரூ.26 லட்சத்துக்கு சூர்மா அணிக்கு சென்றார். கலிங்கா அணி ரூ. 26 லட்சம் கொடுத்து அங்கத் பிர் சிங்கை ஏலத்தில் எடுத்தது. ஆதித்யா (ரூ. 20 லட்சம்) டில்லி அணியில் இணைந்தார். 19 வயது குர்ஜோத் சிங்கை, ரூ. 14.5 லட்சத்துக்கு உ.பி., அணி வாங்கியது.350 வீராங்கனைகள்எச்.ஐ.எல்., தொடரில் முதன் முறையாக பெண்களுக்கான போட்டியும் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கான வீராங்கனைகள் ஏலம் இன்று டில்லியில் நடக்கிறது. மொத்தம் 350 பேர் இதில் இடம் பெற்றுள்ளனர். கோல் கீப்பர் சவிதா, இந்திய அணி கேப்டன் சலிமா, இளம் வீராங்கனை தீபிகா, வந்தனா கட்டாரியா, லால்ரெம்சியாமி, முன்னாள் நட்சத்திரங்கள் லிலிமா, யோகிதா, நமிதா உள்ளிட்டோர் ஏலத்தில் இடம் பிடித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை