உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / நெதர்லாந்தை வீழ்த்தியது பெல்ஜியம்: ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கியில்

நெதர்லாந்தை வீழ்த்தியது பெல்ஜியம்: ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கியில்

சென்னை: ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் பெல்ஜியம் அணி 4-3 என, 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் நெதர்லாந்தை வீழ்த்தி 5வது இடம் பிடித்தது.சென்னை, மதுரையில், ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி 14வது சீசன் நடந்தது. சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடந்த 5-6வது இடத்துக்கான போட்டியில் பெல்ஜியம், நெதர்லாந்து அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் 3-3 என சமநிலையில் இருந்தது. பெல்ஜியம் வீரர் ஹுகோ லாபூச்சர் 'ஹாட்ரிக்' கோல் (18, 30, 58வது நிமிடம்) அடித்தார். நெதர்லாந்து சார்பில் தீஸ் பக்கர் (30வது நிமிடம்), வான் டெர் வீன் (43), ஜோப் வால்பெர்ட் (44) தலா ஒரு கோல் அடித்தனர்.போட்டியின் முடிவு 'பெனால்டி ஷூட் அவுட்' முறைக்கு சென்றது. இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்பட்டன. முடிவில் பெல்ஜியம் அணி 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 5வது இடத்தை தட்டிச் சென்றது. நெதர்லாந்துக்கு 6வது இடம் கிடைத்தது.பிரான்ஸ் வெற்றி: அடுத்து நடந்த 7-8வது இடத்துக்கான போட்டியில் நியூசிலாந்து, பிரான்ஸ் அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸ் அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று 7வது இடம் பிடித்தது. நியூசிலாந்துக்கு 8வது இடம் கிடைத்தது. பிரான்ஸ் அணிக்கு டாம் கெயிலார்ட் 2 (41, 60வது நிமிடம்), கேபின் லோராஜுரி (2), விக்டர்-செயின்ட் மார்டின் (13) கைகொடுத்தனர். நியூசிலாந்து சார்பில் ஜான்டி எல்ம்ஸ் (59வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ