உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / கபடி: தமிழ் தலைவாஸ் கலக்கல்

கபடி: தமிழ் தலைவாஸ் கலக்கல்

புனே: புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 60-29 என பெங்கால் அணியை வீழ்த்தியது.இந்தியாவில் புரோ கபடி லீக் 11வது சீசன் நடக்கிறது. புனேயில் நடந்த லீக் போட்டியில் பெங்கால், தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய தமிழ் தலைவாஸ் அணி, முதல் பாதி முடிவில் 25-13 என முன்னிலையில் இருந்தது. தொடர்ந்து அசத்திய தமிழ் தலைவாஸ் அணி, பெங்கால் வீரர்களை 3 முறை 'ஆல்-அவுட்' செய்தது. இரண்டாவது பாதியில் தமிழ் தலைவாஸ் அணிக்கு 35 புள்ளி கிடைத்தது. பெங்கால் அணி 16 புள்ளி மட்டும் பெற்றது.ஆட்டநேர முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 60-29 என்ற கணக்கில் இமாலய வெற்றி பெற்றது. தமிழ் தலைவாஸ் அணிக்கு மொயின் ஷபாகி (13 புள்ளி), ஹிமான்ஷு (13), கேப்டன் நிதேஷ் குமார் (7), சாய் பிரசாத் (6) கைகொடுத்தனர். பெங்கால் சார்பில் மஞ்ஜீத் 7 புள்ளி பெற்றார்.மற்றொரு லீக் போட்டியில் பாட்னா அணி 41-37 என தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.இதுவரை விளையாடிய 20 போட்டியில், 7 வெற்றி, ஒரு 'டை', 12 தோல்வி என 45 புள்ளிகளுடன் தமிழ் தலைவாஸ் அணி 9வது இடத்தில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ