உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / தங்கம் வென்றார் ஆஷி * கேலோ பல்கலை., விளையாட்டில்

தங்கம் வென்றார் ஆஷி * கேலோ பல்கலை., விளையாட்டில்

ஜெய்ப்பூர்: கேலோ இந்தியா பல்கலை., விளையாட்டு 5வது சீசன் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், உதய்பூர் உள்ளிட்ட 7 நகரங்களில் நடக்கிறது. பெண்களுக்கான துப்பாக்கிசுடுதலில் 50 மீ., 3 பொசிசன்ஸ் பிரிவு போட்டி நடந்தது. 2022 ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற ஆஷி சவுக்சே, சிப்ட் கவுர் சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் சிறப்பாக செயல்பட்ட குருநானக் பல்கலை., வீராங்கனை, 23 வயது ஆஷி, 462.3 புள்ளியுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். கேலோ பல்கலை., விளையாட்டில் தொடர்ந்து வென்ற 4வது தங்கம் இது. சக பல்கலை., வீராங்கனை சிப்ட் கவுருக்கு (459.6) வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. பஞ்சாப் பல்கலை.,யின் மான்யா (444.8) வெண்கலம் வசப்படுத்தினார். இதே பல்கலையை., சேர்ந்த அணி, 10 மீ., ஏர்பிஸ்டல் அணிகளுக்கான பிரிவில் தங்கம் கைப்பற்றியது. இதுவரை 30 தங்கம், 10 வெள்ளி, 11 வெண்கலம் என 51 பதக்கம் வென்ற குருநானக் அணி, பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை