உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / குஷ் மைனி 13வது இடம்: பார்முலா-2 கார்பந்தயத்தில்

குஷ் மைனி 13வது இடம்: பார்முலா-2 கார்பந்தயத்தில்

அபுதாபி: 'பார்முலா-2' கார்பந்தயத்தில் இந்தியாவின் குஷ் மைனி 13வது இடம் பிடித்தார்.நடப்பு ஆண்டுக்கான 'பார்முலா-2' கார்பந்தய சாம்பியன்ஷிப் 14 சுற்றுகளாக நடந்தது. இதில் இந்தியாவின் குஷ் மைனி, 'இன்விக்டா ரேசிங்' அணிக்காக விளையாடினார். அபுதாபியில் நடந்த 14வது, கடைசி சுற்றில் குஷ் மைனி 12வது இடம் பிடித்தார்.இரண்டாவது முறையாக 'பார்முலா-2' போட்டியில் பங்கேற்ற குஷ் மைனி, சிறந்த டிரைவருக்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டியலில், 74 புள்ளிகளுடன் 13வது இடத்தை கைப்பற்றினார். 'இன்விக்டா ரேசிங்' அணியின் பிரேசில் வீரர் கேப்ரியல் போர்டோலெட்டோ, 214.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து உலக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.சிறந்த அணிக்காக உலக சாம்பியன் பட்டத்தை 288.5 புள்ளிகளுடன் குஷ் மைனி இடம் பெற்றுள்ள 'இன்விக்டா ரேசிங்' அணி கைப்பற்றியது. இதுகுறித்து குஷ் மைனி கூறுகையில், ''நடப்பு ஆண்டில் எனது செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை. இருப்பினும் சிறந்த அணிக்கான சாம்பியன்ஷிப் பட்டத்தை எங்கள் 'இன்விக்டா ரேசிங்' அணி வென்றது மகிழ்ச்சி. இது, அடுத்த சீசனில் சிறப்பாக செயல்பட ஊக்கமாக அமையும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை