லிட்டில் செஸ் மாஸ்டர் அனிஷ் * 3 வயதில் கலக்கல்
கோல்கட்டா: செஸ் அரங்கின் இளம் வீரராகி உள்ளார் கோல்கட்டாவின் அனிஷ்.இந்தியாவின் வடக்கு கோல்கட்டாவை சேர்ந்த சிறுவன் அனிஷ் சர்கார். 2021, ஜன. 26ல் பிறந்தார். தற்போது 3 வயது, 8 மாதம் 20 நாள் ஆகிறது. 9 வயதுக்கு உட்பட்டோருக்கான மேற்குவங்க செஸ் தொடரில் பங்கேற்றார்.மொத்தம் போட்டியில் 5.5 புள்ளி எடுத்து, ஒட்டுமொத்தமாக 24வது இடம் பிடித்து வியக்க வைத்துள்ளார் அனிஷ். தவிர ஆரவ், அஹிலன் என இரண்டு தரவரிசை வீரர்களை வென்று, அசத்தினார்.தவிர, இத்தொடரில் நடந்த கண்காட்சி போட்டியில் இந்தியாவின் 'நம்பர்-1', உலகின் 'நம்பர்-3' வீரர் அர்ஜுன் எரிகைசியுடன் விளையாடி மிரட்டியுள்ளார்.இதையடுத்து சர்வதேச தரவரிசை ('பிடே') பட்டியலில் இடம் பிடித்த இளம் வீரர் என அனிஷ் சாதனை படைத்தார். முன்னதாக இந்தியாவின் தேஜஸ் திவாரி, 5 வயதில் அசத்தி இருந்தார்.