உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / தேசிய செஸ்: கார்த்திக் சாம்பியன்

தேசிய செஸ்: கார்த்திக் சாம்பியன்

குருகிராம்: தேசிய செஸ் சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்றார் கார்த்திக். ஹரியானாவில் 61வது தேசிய சீனியர் செஸ் சாம்பியன்ஷிப் நடந்தது. இதன் கடைசி, 11வது சுற்றில் ஆந்திராவின் கார்த்திக் வெங்கடராமன், மித்ரபா குஹாவை வீழ்த்தினார். 11 சுற்று முடிவில் கார்த்திக் வெங்கடராமன், சூர்ய சேகர் கங்குலி (பாரத் பெட்ரோலியம்), நீலேஷ் ஷா (ரயில்வே) தலா 9.0 புள்ளி பெற்றனர். இதையடுத்து 'டை பிரேக்கரில்' அதிக ஸ்கோர் எடுத்த கார்த்திக் (78.0), முதலிடம் பிடித்து, தொடர்ந்து இரண்டாவது முறையாக தேசிய சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார். இவருக்கு ரூ. 6 லட்சம் பரிசு கிடைத்தது. சூர்ய சேகர் (77.5), நீலேஷ் (76.5) அடுத்த இரு இடம் பிடித்தனர். இவர்களுக்கு ரூ. 5 லட்சம், ரூ. 4 லட்சம் பரிசு கிடைத்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ