தங்கம் வென்றார் தமிழகத்தின் செலினா * தேசிய விளையாட்டு டேபிள் டென்னிசில்...
டேராடூன்: தேசிய விளையாட்டு டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் தமிழகத்தின் செலினா தங்கப்பதக்கம் கைப்பற்றினார். தேசிய விளையாட்டு உத்தரகாண்ட்டில் நடக்கிறது. டேபிள் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு பைனலில் தமிழகத்தின் செலினா, மகாராஷ்டிராவின் அனுபவ ஸ்வஸ்திகா மோதினர். முதல் இரு செட்டை கைப்பற்றிய செலினா, அடுத்த மூன்று செட்டுகளை இழந்தார். பின் சுதாரித்த செலினா, கடைசி இரு செட்டை வசப்படுத்தினார். நீண்ட போராட்டத்தின் முடிவில், செலினா 4-3 என்ற (11-7, 11-2, 6-11, 7-11, 8-11, 11-7, 11-9) கணக்கில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். சத்யன் அதிர்ச்சிஆண்கள் ஒற்றையர் பைனலில் தமிழக வீரர் சத்யன், மகாராஷ்டிராவின் ஜாஷ் மோடியை சந்தித்தார். இதில் 3-4 என்ற (7-11, 6-11, 11-7, 11-8, 14-12, 6-11, 11-6) கணக்கில் சத்யன் அதிர்ச்சித் தோல்வியடைய, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. ஜாஷ் மோடி தங்கம் வென்றார்.கலப்பு இரட்டையர் பைனலில் மேற்கு வங்கத்தின் ஆயிஹா, அனிர்பன் ஜோடி 3-2 என (10-12, 6-11, 11-7, 11-8, 11-2) மகாராஷ்டிராவின் ரீத் டென்னிசன், சின்மயா ஜோடியை சாய்த்து, தங்கப்பதக்கம் கைப்பற்றியது. ஹரியானா அபாரம்பெண்களுக்கான ஹாக்கி பைனலில் ஹரியானா, மத்திய பிரதேச அணிகள் மோதின. இதில் ஹரியானா அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றியது. கடந்த தேசிய விளையாட்டு பைனலில் மத்திய பிரதேசத்திடம் அடைந்த தோல்விக்கு பதிலடி தந்தது.வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஜார்க்கண்ட் அணி, 2-1 என மகாராஷ்டிராவை வீழ்த்தியது.ஆண்களுக்கான பைனலில் கர்நாடக அணி, 3-2 என்ற கோல் கணக்கில் உ.பி.,யை வீழ்த்தி, தங்கப்பதக்கம் கைப்பற்றியது. வெண்கலப் பதக்கதுக்கான போட்டியில் மகாராஷ்டிரா அணி 1-0 என பஞ்சாப்பை வென்றது. பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' மல்யுத்தத்தில் மகாராஷ்டிராவின் சுவாதி (53 கிலோ), ஹரியானாவின் தப்ஸ்யா (57 கிலோ) தங்கம் கைப்பற்றினர். ஆண்கள் பிரிவில் சர்வீசஸ் வீரர் ஜெய்தீப் (74 கிலோ), டில்லியின் முகுல் (86 கிலோ) தங்கம் வசப்படுத்தினர். 88 பதக்கம்தேசிய விளையாட்டில் தமிழகம் 26 தங்கம், 30 வெள்ளி, 32 வெண்கலம் என மொத்தம் 88 பதக்கம் வென்று, 6வது இடத்தில் நீடிக்கிறது. சர்வீசஸ் (67 தங்கம், 26 வெள்ளி, 27 வெண்கலம் என 120), மகாராஷ்டிரா (53 தங்கம், 70 வெள்ளி, 72 வெண்கலம் என 195), ஹரியானா (46 தங்கம், 46 வெள்ளி, 58 வெண்கலம் என 150) அணிகள் முதல் மூன்று இடத்தில் உள்ளன.