உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஹாக்கி: இந்தியா ஏமாற்றம்

ஹாக்கி: இந்தியா ஏமாற்றம்

ஆம்ஸ்டெல்வீன்: சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில், புரோ லீக் தொடர் நடக்கிறது. 9 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி தனது 9 வது போட்டியில் நேற்று, நெத்லாந்தை அதன் சொந்தமண்ணில் எதிர்கொண்டது.போட்டியின் 19 வது நிமிடத்தில் இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், கோலாக மாற்றினார். போட்டியின் 25 வது நிமிடம் நெதர்லாந்து அணியின் வான் டாம், ஒரு பீல்டு கோல் அடிக்க, முதல் பாதி ஸ்கோர் 1-1 என சமனில் முடிந்தது.இரண்டாவது பாதியில் போட்டி முடிவதற்கு சற்று முன், வான் டாம் (58) மீண்டும் ஒரு கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில் நெதர்லாந்து (17), இங்கிலாந்து (16 புள்ளி), பெல்ஜியம் (16) முதல் மூன்று இடத்தில் உள்ளன. இந்தியா (15) 4வது இடத்தில் (9ல் 5 வெற்றி, 4 தோல்வி) உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !