மேலும் செய்திகள்
புனே-உ.பி., 'டை' * புரோ கபடி லீக் போட்டியில்...
19-Nov-2024
புனே: புரோ கபடி லீக் போட்டியில் ஜெய்ப்பூர் அணி 42-29 என குஜராத்தை வீழ்த்தியது.இந்தியாவில் புரோ கபடி லீக் தொடரின் 11வது சீசன் நடக்கிறது. மொத்தம் 12 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நேற்று புனேயில் நடந்த போட்டியில் ஜெய்ப்பூர், குஜராத் அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் ஜெய்ப்பூர் அணி, 27--16 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து இரண்டாவது பாதியில் அசத்திய ஜெய்ப்பூர் அணி 42-29 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.ஜெய்ப்பூர் வீரர் அர்ஜுன் தேஷ்வல் அதிகபட்சம் 13 புள்ளி எடுத்து வெற்றிக்கு கைகொடுத்தார். குஜராத் சார்பில் கேப்டன் குமன் சிங், ராகேஷ் தலா 9 புள்ளி எடுத்து உதவினர்.
19-Nov-2024