மேலும் செய்திகள்
கபடி: தமிழ் தலைவாஸ் ஏமாற்றம்
22-Nov-2024
புரோ கபடி: தமிழ் தலைவாஸ் ஏமாற்றம்
14-Nov-2024
அதிமுகவுக்கு தமிழிசை சொன்ன மெசேஜ்
12-Nov-2024
நொய்டா: புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 40-26 என்ற கணக்கில் உ.பி., அணியை வீழ்த்தியது. இந்தியாவில், புரோ கபடி லீக் 11வது சீசன் நடக்கிறது. மொத்தம் 12 அணிகள் மோதுகின்றன. நொய்டாவில் நேற்று நடந்த லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ், உ.பி., யோதாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டி துவங்கிய 6 வது நிமிடம் 6-1 என தமிழ் தலைவாஸ் அணி முன்னிலை பெற்றது. பின் உ.பி., அணி சிறப்பாக செயல்பட, 15-11 என முந்தியது. அடுத்து உ.பி., அணியை 'ஆல் அவுட்' செய்த தமிழ் தலைவாஸ் அணி, கடைசி 10 நிமிடம் இருந்த போது 25-19 என மீண்டும் முன்னிலை பெற்றது. முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 40-26 என்ற கணக்கில் கலக்கல் வெற்றி பெற்றது.தமிழ் தலைவாஸ் அணி 13 போட்டியில் 5 வெற்றி, 1 'டை', 7 தோல்வியுடன் 33 புள்ளி எடுத்து, பட்டியலில் 9வதாக உள்ளது.
22-Nov-2024
14-Nov-2024
12-Nov-2024