உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / அரையிறுதியில் நிகால் சரின் * புல்லட் செஸ் சாம்பியன்ஷிப்பில்...

அரையிறுதியில் நிகால் சரின் * புல்லட் செஸ் சாம்பியன்ஷிப்பில்...

புதுடில்லி: 'புல்லட்' செஸ் தொடரின் அரையிறுதிக்கு நிகால் சரின் முன்னேறினார்.'புல்லட்' செஸ் சாம்பியன்ஷிப் தொடர் ஆன்லைன் வழியில் நடக்கிறது. 'நாக் அவுட்' முறையிலான இத்தொடரில் இந்தியா சார்பில் பிரக்ஞானந்தா, நிகால் சரின் உட்பட 16 பேர் பங்கேற்கின்றனர். பிரக்ஞானந்தா முதல் சுற்றுடன் திரும்பினார். நிகால் சரின் முதல் சுற்றில் அமெரிக்காவின் பேபியானோ காருணாவை 13.5-6.5 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார்.காலிறுதியில் மற்றொரு அமெரிக்க வீரர் ஆன்ட்ரூ டங்குடன் மோதினார். இருவருக்கும் தலா 30 நிமிடம் தரப்பட்டன. இதில் துவக்கத்தில் இருந்து சிறப்பாக செயல்பட்டார் நிகால் சரின். மொத்தம் 11 போட்டியில் மோதினர். இதில் நிகால் சரின் 5ல் வெற்றி பெற்று, 2 போட்டியை 'டிரா' செய்தார். 4ல் தோல்வியடைந்தார்.ஆன்ட்ரூ 4 வெற்றி 2 'டிரா' செய்து, 5ல் தோற்றார். முடிவில் நிகால் சரின் 14-12 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார். இதில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவை சந்திக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை