மேலும் செய்திகள்
புரோ கபடி: உ.பி., அணி வெற்றி
25-Sep-2025
புதுடில்லி: புரோ கபடி லீக் 'டை பிரேக்கரில்' அசத்திய புனே அணி, டில்லியை வீழ்த்தியது.இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன் நடக்கிறது. இதில் தமிழ் தலைவாஸ், 'நடப்பு சாம்பியன்' ஹரியானா உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன.டில்லியில் நடந்த லீக் போட்டியில், ஏற்கனவே 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறிய புனே, டில்லி அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் டில்லி அணி 21-20 என முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட புனே அணிக்கு 18 புள்ளி கிடைத்தது. விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் 38-38 என சமநிலையில் இருந்தது.பின் 'டை பிரேக்கரில்' அசத்திய புனே அணி 6-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. புனே அணிக்கு பங்கஜ் (7 புள்ளி), கேப்டன் அஸ்லாம் இனாம்தர் (6) கைகொடுத்தனர். டில்லி அணி சார்பில் அஜின்கியா பவார் 10, நவீன் 5 புள்ளி பெற்றனர்.இதுவரை விளையாடிய 15 போட்டியில், 12 வெற்றி, 3 தோல்வி என, 24 புள்ளிகளுடன் புனே அணி முதலிடத்துக்கு முன்னேறியது. டில்லி அணி (24 புள்ளி, 12 வெற்றி, 3 தோல்வி) 2வது இடத்துக்கு தள்ளப்பட்டது. மற்றொரு லீக் போட்டியில் பெங்களூரு அணி 43-32 என, பெங்கால் அணியை வீழ்த்தியது.
25-Sep-2025