உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / மாரத்தானில் ஓடிய ரோபோக்கள்: சீனாவில் புதிய சாதனை

மாரத்தானில் ஓடிய ரோபோக்கள்: சீனாவில் புதிய சாதனை

பீஜிங்: சீனாவில் நடந்த பாதி மாரத்தான் ஓட்டத்தில் முதன்முறையாக மனித வடிவ ரோபோக்கள் பங்கேற்றன.சீனாவின் பீஜிங் நகரில், பாதி மாரத்தான் ஓட்டம் நடந்தது. இதில் பல்வேறு நிறுவனங்கள், பல்கலை., தயாரித்த 21 மனித வடிவ ரோபோக்கள் பங்கேற்றன. வீரர்கள், ரோபோக்கள் ஓடுவதற்கு தனித்தனி பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன.மொத்தம் 21.1 கி.மீ., துாரம் கொண்ட இலக்கை, சீனாவின் 'டியென் குங்' அணி சார்பில் உருவாக்கப்பட்ட 'டியென் குங் அல்ட்ரா' என்று அழைக்கப்படும் 'தி ஸ்கை ப்ராஜெக்ட் அல்ட்ரா' ரோபோ, 2 மணி நேரம், 40 நிமிடம், 42 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தது. ஆறு ரோபோக்கள் மட்டும் இலக்கை முழுமையாக கடந்தன. மற்றவை தொழில்நுட்ப கோளாரால் பாதியில் நின்றன. இருப்பினும் மாரத்தானில் முதன்முறையாக ரோபோக்கள் பங்கேற்றது சாதனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி