மேலும் செய்திகள்
சீன ஓபன் டென்னிஸ்: ஆன்ட்ரீவா அசத்தல்
08-Oct-2026
இரண்டாவது சுற்றில் ஜாஸ்மின் நிங்போ: சீனாவின் நிங்போவில் பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரோவா, 6–2, 6–3 என சீனாவின் ஹன்யு குவோவை வென்றார். மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜாஸ்மின் பாவோலினி, 6–2, 7–5 என்ற கணக்கில் உக்ரைனின் கலினினாவை வீழ்த்தினார். மற்ற முதல் சுற்று போட்டிகளில் ரஷ்யாவின் ஸ்னைடர், சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர். அர்ஜென்டினாவிடம் வீழ்ந்தது நியூசி., சேல்: பெண்களுக்கான ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து (17 வயது) தொடர் மொராக்கோவில் நடக்கிறது. வடக்கு மொராக்கோவில் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் அர்ஜென்டினா, நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் அர்ஜென்டினா அணி, 1–0 ***** என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது. ‘பி’ பிரிவில் நடந்த போட்டியில் வட கொரிய அணி 4–0 *** என்ற கோல் கணக்கில் போலந்தை வென்றது.
08-Oct-2026