உள்ளூர் செய்திகள்

‘ரவுண்ட்–அப்’

பென் ஷெல்டன் அசத்தல் பாரிஸ்: பிரான்சில், பாரிஸ் மாஸ்டர்ஸ் ‘சூப்பர் 1000’ டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் அமெரிக்காவின் பென் ஷெல்டன், பிரான்சின் ஆர்தர் ரின்டர்க்னெக் மோதினர். இதில் ஷெல்டன் 3–6, 6–4, 7–6 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இது, இந்த ஆண்டு ஷெல்டனின் 43வது வெற்றி. ஒரு சீசனில் அதிக வெற்றி பெற்று, தனது சிறந்த செயல்பாட்டை பதிவு செய்தார் ஷெல்டன். இதற்கு முன், 2024ல் 42 வெற்றி பெற்றிருந்தார். மான்செஸ்டர் சிட்டி வெற்றி லீப்ஜிக்: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து 72வது சீசன் நடக்கிறது. செக்குடியரசில் நடந்த லீக் போட்டியில் லீப்ஜிக் (ஜெர்மனி), மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து) அணிகள் மோதின. எர்லிங் ஹாலண்ட் 78வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து கைகொடுக்க, மான்செஸ்டர் சிட்டி அணி 3–2 என்ற கணக்கில் ‘திரில்’ வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய 4 போட்டியில், 3 வெற்றி, ஒரு தோல்வி என 9 புள்ளிகளுடன் 7வது இடத்துக்கு முன்னேறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !