மேலும் செய்திகள்
உலக விளையாட்டு செய்திகள்
03-Oct-2025
வெள்ளி வென்றார் தரம்பிர்: உலக பாரா தடகளத்தில்
02-Oct-2025
உலக விளையாட்டு செய்திகள்
02-Oct-2025
போபால்: ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் தகுதி போட்டி பைனலில் அஞ்சும், ஸ்வப்னில் குசலே வெற்றி பெற்றனர்.பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் பங்கேற்கும் இந்திய நட்சத்திரங்களுக்கான தகுதி போட்டி போபாலில் நடக்கிறது. பெண்களுக்கான 50 மீ., 'ரைபிள்-3 பொஷிஷன்' பைனலில் 463.9 புள்ளிகளுடன் அஞ்சும் முதலிடம் பிடித்தார். அடுத்த இரு இடங்களை சிப்ட் கவுர் சாம்ரா (462.0 புள்ளி), ஆஷி (447.3) கைப்பற்றினர்.ஆண்களுக்கான 50 மீ., 'ரைபிள்-3 பொஷிஷன்' பைனலில் ஸ்வப்னில் குசலே 587 புள்ளிகளுடன் முதலிடத்தை தட்டிச் சென்றார். அகில் ஷியோரன் (461.6) 2வது இடம் பிடித்தார். தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்த ஐஸ்வரி பிரதாப் சிங் தோமருக்கு (451.9) 3வது இடம் கிடைத்தது.பெண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் மனு பாகர் (577 புள்ளி) முதலிடம் பிடித்தார். அடுத்த நான்கு இடங்களை பாலக் (576), ஈஷா சிங் (576), சுர்பி ராவ் (574), ரிதம் சங்வான் (573) தட்டிச் சென்றனர்.பெண்களுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு தகுதிச் சுற்றில் முதல் மூன்று இடங்களை இளவேனில் (634.4), திலோத்தமா சென் (632.4), ரமிதா (630.8) கைப்பற்றினர்.ஆண்கள் பிரிவு தகுதிச் சுற்றில் அர்ஜுன் சிங் சீமா (10 மீ., 'ஏர் பிஸ்டல்'), அர்ஜுன் பாபுதா (10 மீ., 'ஏர் ரைபிள்') முதலிடம் பிடித்தனர்.
03-Oct-2025
02-Oct-2025
02-Oct-2025