வெள்ளி வென்றார் சைன்யம் * உலக கோப்பை துப்பாக்கிசுடுதலில்...
ஹாங்சு: உலக கோப்பை துப்பாக்கிசுடுதலில் இந்திய வீராங்கனை சைன்யம், வெள்ளி வென்றார்.சீனாவில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் ('ரைபிள்'/'பிஸ்டல்'/'ஷாட் கன்') போட்டி நடக்கிறது. பெண்களுக்கான 10 மீ., ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியா சார்பில் சுருச்சி சிங் (579), சைன்யம் (579) என இரண்டு வீராங்கனைகள் தகுதிச்சுற்றில் 9, 10 வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர். இதில் சீனாவின் குயான்ஜுன் (243.6) தங்கம் வென்றார். 0.2 புள்ளி வித்தியாசத்தில் பின் தங்கிய சைன்யம் (243.4) வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். இத்தொடரில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இது ஆனது. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஈரானின் ஹனியா (221.0) வெண்கலம் வென்றார். சுருச்சி சிங்கிற்கு (137.6) 7வது இடம் கிடைத்தது.