உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஸ்கேட்டிங்: ஆனந்த்குமார் அசத்தல்

ஸ்கேட்டிங்: ஆனந்த்குமார் அசத்தல்

அசுன்சியான்: உலக ஸ்கேட்டிங் விளையாட்டு மாரத்தான் போட்டியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கம் வென்றார் இந்தியாவின் ஆனந்த்குமார். பராகுவேயில் உலக ஸ்கேட் விளையாட்டு நடந்தது. 42 கி.மீ., மாரத்தான் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஆனந்த்குமார் வேல்குமார் 23, முதலிடம் பிடித்து, தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கம் தட்டிச் சென்றார். முன்னதாக கடந்த ஆண்டு சீனாவில் நடந்த போட்டியில் தங்கம் வென்றிருந்தார். தவிர இத்தொடரில் ஆனந்த்குமார் வென்ற மூன்றாவது பதக்கம் இது. இதற்கு முன், வெள்ளி (1500 மீ.,), வெண்கலம் (500 மீ.,) வென்றிருந்தார்). ஒட்டுமொத்தமாக உலக ஸ்கேட்டிங்கில் இந்தியா, 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கம் கைப்பற்றியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை