இரண்டாவது சுற்றில் அனாஹத்
ஷாங்காய்: சீன ஓபன் ஸ்குவாஷ் 'கோல்டு லெவல்' தொடர் ஷாங்காய் நகரில் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் அனாஹத் சிங், எகிப்தின் மென்னா ஹமீதுவை எதிர்கொண்டார்.முதல் செட்டை 11-6 என வென்றார் அனாஹத். தொடர்ந்த அசத்திய இவர் அடுத்த இரு செட்டுகளையும் 11-8, 11-3 என வசப்படுத்தினார். முடிவில் அனாஹத், 3-0 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். இரண்டாவது சுற்றில் அனாஹத், எகிப்தின் மற்றொரு வீராங்கனை சனா இப்ராஹிமை சந்திக்க உள்ளார். ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் 0-3 என்ற செட் கணக்கில் (8-11, 12-14, 6-11), எகிப்தின் முகமதுவிடம் தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் இந்திய வீரர் அபே சிங், 0-3 என (8-11, 7-11, 4-11), பிரான்சின் பாப்சிஸ்டேவிடம் வீழ்ந்தார்.