உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஸ்குவாஷ்: தான்வி 2வது இடம்

ஸ்குவாஷ்: தான்வி 2வது இடம்

ஆமதாபாத்: ஆமதாபாத்தில் 'ஸ்குவாஷ் இந்தியா' தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், இத்தொடரின் 'நம்பர்-1' வீராங்கனை இந்தியாவின் தான்வி கன்னா, 'நம்பர்-3' அந்தஸ்து பெற்ற எகிப்தின் பரிதா வாலித் மோதினர். முதல் இரு செட்டை தான்வி, 11-9, 15-13 என போராடி கைப்பற்ற, 2-0 என முன்னிலை பெற்றார். பின் ஏமாற்றிய இவர், அடுத்த இரு செட்டுகளை 8-11, 10-12 என இழந்தார்.ஐந்தாவது, கடைசி செட்டில் தான்வி 5-11 என எளிதாக கோட்டை விட்டார். முடிவில் தான்வி 2-3 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.ஆண்கள் ஒற்றையர் பைனலில் எகிப்தின் ரெபாய், ஹொசாம் மோதினர். இதில் ரெபாய் 11-4, 11-7, 11-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை