உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஸ்குவாஷ்: வேலவன் ஏமாற்றம்

ஸ்குவாஷ்: வேலவன் ஏமாற்றம்

கிளீவ்லாந்து: சர்வதேச ஸ்குவாஷ் இரண்டாவது சுற்றில் வேலவன் செந்தில்குமார் தோல்வியடைந்தார். அமெரிக்காவின் கிளீவ்லாந்தில் சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் 'நம்பர்-2' வீரர் வேலவன் செந்தில்குமார் (தமிழகம்), இத்தொடரின் 'நம்பர்-3' அந்தஸ்து பெற்ற எகிப்தின் தரேக் மோமெனை எதிர்கொண்டார்.முதல் செட்டை வேலவன் 4-11 என இழந்தார். தொடர்ந்து ஏமாற்றிய இவர் அடுத்த இரு செட்டையும் 7-11, 8-11 என கோட்டை விட்டார்.27 நிமிடம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில் வேலவன், 0-3 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !