மேலும் செய்திகள்
பிரைட்டன் அணியிடம் வீழ்ந்தது செல்சி
22-Apr-2026
மாட்ரிட்: ஸ்பெயினில், மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், உக்ரைனின் டாரியா ஸ்னிகுர் மோதினர். இதில் ஸ்வியாடெக் 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, 3வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு 2வது சுற்று போட்டியில் ரஷ்யாவின் டயானா ஷ்னைடர் 3-6, 7-5, 6-1 என, ஸ்பெயினின் ஜெசிகா மனேரோவை தோற்கடித்தார்.பார்சிலோனா 'சாம்பியன்'பார்சிலோனா: ஸ்பெயினில், பெண்களுக்கான 'லிகா எப்' (ஸ்பானிஷ் லீக்) கால்பந்து 38வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் பார்சிலோனா, எஸ்பான்யோல் அணிகள் மோதின. இதில் பார்சிலோனா அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய 26 போட்டியில், 25 வெற்றி, ஒரு தோல்வி என, 75 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் ரியல் மாட்ரிட் அணி (59 புள்ளி, 25 போட்டி) உள்ளது. மீதமுள்ள 5 போட்டியில் வென்றால் கூட ரியல் மாட்ரிட் அணிக்கு 74 புள்ளி தான் கிடைக்கும். எனவே முதலிடத்தை உறுதி செய்த பார்சிலோனா அணி, 11வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.இன்டர் மயாமி கலக்கல்சாண்டி: அமெரிக்காவில், மேஜர் லீக் கால்பந்து (எம்.எல்.எஸ்.,) தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் இன்டர் மயாமி, ரியல் சால்ட் லேக் அணிகள் மோதின. ரோட்ரிகோ டி பால் (82வது நிமிடம்), லுாயிஸ் சாரஸ் (84வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுக்க, இன்டர் மயாமி அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய 9 போட்டியில், 5 வெற்றி, 3 'டிரா', ஒரு தோல்வி என, 18 புள்ளிகளுடன் இன்டர் மயாமி அணி 2வது இடத்துக்கு முன்னேறியது.எக்ஸ்டிராஸ்* ஹரியானாவின் பானிபட்டில் நடக்கும் ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் வைதேகி சவுத்ரி 6-0, 6-4 என, சகவீராங்கனை ஹர்ஷினியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.* டென்மார்க்கில், தாமஸ், உபர் கோப்பை பாட்மின்டன் தொடர் இன்று துவங்குகிறது. ஆண்களுக்கான தாமஸ் கோப்பையில் இந்திய அணி 'ஏ' பிரிவில் கனடா (ஏப். 24), ஆஸ்திரேலியா (ஏப். 27), சீனாவுடன் (ஏப். 29) இடம் பெற்றுள்ளது. பெண்களுக்கான உபர் கோப்பையில் இந்திய அணி 'ஏ' பிரிவில் டென்மார்க் (ஏப். 24), உக்ரைன் (ஏப். 25), சீனாவுடன் (ஏப். 27) உள்ளது.* டேராடூனில், மாநிலங்களுக்கு இடையிலான ஜூனியர், யூத் தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் (19 வயது) பைனலில் தமிழகத்தின் அபினந்த், பாலமுருகன் ஜோடி 3-1 என, சக மாநிலத்தை சேர்ந்த மேஹன், உமேஷ் குமார் ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது. இதன் ஒற்றையரில் அபினந்த் வெள்ளி வென்றார்.
22-Apr-2026