உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / டேபிள் டென்னிஸ்: மணிகா அபாரம்

டேபிள் டென்னிஸ்: மணிகா அபாரம்

மஸ்கட்: டபிள்யு.டி.டி., கன்டென்டர் டேபிள் டென்னிஸ் முதல் சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா, மனுஷ் ஷா வெற்றி பெற்றனர்.ஓமனில், டபிள்யு.டி.டி., கன்டென்டர் டேபிள் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா, ரஷ்யாவின் மரியா பான்பிலோவா மோதினர். இதில் மணிகா 3-2 (9-11, 11-8, 11-7, 8-11, 12-10) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மனுஷ் ஷா, சீனதைபேயின் குவான்-ஹாங் குவோ மோதினர். இதில் மனுஷ் ஷா 3-0 (11-6, 11-5, 11-5) என வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் சத்யன் ஞானசேகரன் 0-3 (6-11, 10-12, 7-11) என சீனாவின் ருய்போ வென்னிடம் தோல்வியடைந்தார். இந்தியாவின் மானவ் தாக்கர் 1-3 (4-11, 11-6, 2-11, 7-11) என சீனாவின் ஷிடோங் லின்னிடம் வீழ்ந்தார்.பெண்கள் இரட்டையர் பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் ஸ்வஸ்திகா கோஷ், தனீஷா ஜோடி 3-1 (7-11, 11-6, 11-4, 11-9) என ஸ்லோவாகியாவின் டாட்டியானா, பிரிட்டனின் டின்-டின் ஹோ ஜோடியை வீழ்த்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை