மேலும் செய்திகள்
டேபிள் டென்னிஸ்: சரத் கமல் வெற்றி
27-Mar-2025
டுனிஸ்: உலக டேபிள் டென்னிஸ் கன்டெண்டர் தொடர் டுனிசியாவில் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று நடந்தது. தகுதிச்சுற்றில் இருந்து முன்னேறிய இந்தியாவின் தியா சிட்டாலே, இத்தொடரின் 'நம்பர்-7' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் 'நம்பர்-1' வீராங்கனை மணிகா பத்ராவை சந்தித்தார். முதல் செட்டை 12-10 என கைப்பற்றினார் தியா. அடுத்த இரு செட்டை மணிகா 11-5, 11-9 வசப்படுத்தினார். கடைசி இரு செட்டில் எழுச்சி பெற்ற தியா 11-4, 11-4 என கைப்பற்றினார். முடிவில் தியா 3-2 என்ற செட் கணக்கில் மணிகாவை வீழ்த்தினார். இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, சுவீடனின் கிறிஸ்டிரா கால்பெர்க்கை எதிர்கொண்டார். இதில் ஸ்ரீஜா 0-3 என்ற (6-11, 9-11, 8-11) நேர் செட்டில் தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் யாஷஸ்வினி, 0-3 என (7-11, 6-11, 9-11) ஜப்பாவின் அனே உசவாவிடம் வீழ்ந்தார். ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய், 3-0 என (6-11, 8-11, 7-11) சீனாவின் இபெயை வென்றார்.
27-Mar-2025