உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / காலிறுதியில் மனுஷ் தோல்வி

காலிறுதியில் மனுஷ் தோல்வி

மஸ்கட்: உலக டேபிள் டென்னிஸ் கண்டென்டர் தொடர் காலிறுதியில் இந்தியாவின் மனுஷ் தோல்வியடைந்தார்.ஓமனில், உலக டேபிள் டென்னிஸ் கண்டென்டர் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், இந்தியாவின் மனுஷ் ஷா, இத்தொடரின் 'நம்பர்-6' வீரர் ஜப்பானின் சோராவை 3-2 என வீழ்த்தினார். காலிறுதியில் மனுஷ் ஷா, சீனாவின் சென் யுவான்யுவை சந்தித்தார். முதல் செட்டை 5-11 என இழந்த மனுஷ், அடுத்த செட்டை 8-11 என நழுவவிட்டார். தொடர்ந்து மூன்றாவது செட்டிலும் 8-11 என ஏமாற்றினார். முடிவில் மனுஷ் 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா, 1-3 என சீனாவின் குன் யுக்ஸ்வானிடம் தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, 2-3 என ஜப்பானின் சகுராவிடம் போராடி வீழ்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ